தொடர்புடைய செய்திகள்
- சென்னை திரையரங்குகளில் ’கோட்’ பட பேனர்கள் அகற்றம்: மாநகராட்சி அதிரடி
- சூறைக்காற்றுடன் பெய்த கனமழை.. சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!
- சென்னை ஃபார்முலா கார் பந்தயம் செல்பவர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம்.. முழு விவரங்கள்..!
- சென்னை வேளச்சேரியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.. போக்குவரத்து மாற்றம்..!
- சென்னை மெட்ரோ ரயில் 3வது வழித்தடத்தின் சுரங்கம் தோண்டும் பணி.. முக்கிய தகவல்..!
மீண்டும் ஒரு வாரத்திற்கு முந்தைய விலைக்கு சென்ற தங்கம்.. சென்னை நிலவரம்..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் திடீரென ஒரு வாரத்திற்கு முந்தைய விலைக்கு தங்கம் விலை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 6,695 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 53,560 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,150 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,200 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 92.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 92,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
