திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (09:40 IST)

திமுக எம்.எல்.ஏவுக்கு நெஞ்சுவலி: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்களுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவான கு.க.செல்வத்துக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் நேற்று மாலை 6.20 மணிக்கு ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
எம்.எல்.கு.க.செல்வத்திற்கு அப்பல்லோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று அவருக்கு ஒருசில பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் நாளை அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யவுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சை பெற்று வரும் எம்.எல்.ஏ கு.க.செல்வம் அவர்களை திமுக பிரமுகர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.