வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2019 (11:45 IST)

திருடனைப் பிடிக்க சென்ற போலிஸ் – திருடனானக் கதை !

சென்னயில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நகை திருட்டுகளைப் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட போலிஸ் குழு திருடர்களிடம் நகையைப் பறிமுதல் செய்து பங்கிட்டுக்கொண்டுள்ள தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகமாக நகை திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இந்த திருட்டு சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவும் திருடர்களைப் பிடிக்கவும் 3 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையை சேர்ந்த 2 அதிகாரிகளும் விடுப்பு எடுத்துக்கொண்டு திருடர்களை தேடி சென்று பிடித்துள்ளனர்.

ஆனால் பிடித்த திருடர்களைக் கைது செய்யாமல் அவர்களிடமே பேரம் பேசி 20 சவரன் நகைகளையும் 10 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியானதை அடுத்து மாவட்ட காவல் இணை ஆணையர் 3 போலிஸார் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் மூவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டிஸும் அனுப்பப்பட்டுள்ளது.

போலிஸ்காரர்களே திருடர்களோடு சேர்ந்துகொண்டு திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.