வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2023 (11:13 IST)

தமிழக ஆளுநரை சந்திக்க மாநகர காவல் ஆணையர் விரைவு.. குண்டுவீச்சு சம்பவம் குறித்து ஆலோசனை..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆளுநர் மாளிகைக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நேற்று ஆளுனர் மாளிகையிலி நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வருகை என தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆளுநர் மாளிகை முன்பு நேற்று கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கருக்கா வினோத்தை கைது செய்த போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
 
பெட்ரோல் வீச்சு சம்பவத்தை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva