வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2020 (17:06 IST)

வாகனங்களின் நம்பர் ப்ளேட் இனி இப்படிதான் இருக்கணும்… புதிய விதிமுறைகள்!

சென்னை காவல்துறை வாகனங்களின் நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டுமென சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வாகனங்களில் நம்பர் பிளேட் சரியாக வைக்கப்படுவதில்லை என்றும் அப்படியே வைத்தாலும் விதிமுறைகளை மீறி அளவுகளில் வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இப்போது சென்னை காவல்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • 70 சிசி திறன் கொண்ட இன்ஜின் கொண்ட இரு சக்கர வாகனங்களில்  நம்பர் பிளேட்டின் எழுத்து உயரம் 15 மி.மீ, தடிமன் 1.2 மி.மீ, இடைவெளி 2.5 மி.மீ இருக்க வேண்டும். பின்னால் நம்பர் பிளேட்டின் எழுத்து உயரம் 35மி.மீ, தடிமன் 7மி.மீ, இடைவெளி 5மி.மீ இருக்க வேண்டும்.
  • ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்களில் எழுத்து உயரம் 40 மி.மீ, தடிமன் 7 மி.மீ, இடைவெளி 5 மி.மீ இருக்க வேண்டும். 500 சிசிக்கும் குறைவான 3 சக்கர வாகனங்களில் எழுத்து உயரம் 35 மி.மீ, தடிமன் 7 மி.மீ, இடைவெளி 5மி.மீ இருக்க வேண்டும்.
  • பிற அனைத்து வாகனங்களிலும் எழுத்து உயரம் 65மி.மீ, தடிமன் 10 மி.மீ, இடைவெளி 10 மி.மீ இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
  • தனியார் வாகனங்கள் நம்பர் பிளேட் வெள்ளை நிறத்திலும், அனைத்து வர்த்தக வாகனங்களில் நம்பர் பிளேட் மஞ்சள் நிறத்திலும் இருக்க வேண்டும் என்றும் எழுத்துக்கள் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்க வேண்டும்