புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (14:07 IST)

ரூ.3 கோடிக்கு மேல் வாடகை பாக்கி: சென்னை மயிலாப்பூர் கிளப்புக்கு சீல்!

ரூ.3 கோடிக்கு மேல் வாடகை பாக்கி: சென்னை மயிலாப்பூர் கிளப்புக்கு சீல்!
சென்னை மயிலாப்பூர் கிளப்புக்கு 3 கோடிக்கு மேல் வாடகை பாக்கி இருந்த நிலையில் அந்த கிளப்பை இழுத்து மூடி சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்து 2022 ஜனவரி 31 வரை அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த சென்னை மயிலாப்பூர் கிளப், ரூபாய் 4 கோடி வாடகை செலுத்த வேண்டிய நிலை இருந்தது
 
இந்த நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரு கோடிக்கான காசோலையை மட்டுமே கிளப் நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் 3 கோடிக்கு மேல் வரி பாக்கி உள்ளதால் சென்னை மயிலாப்பூர் கிளப்பை  பூட்டி அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பல ஆண்டு காலமாக இயங்கி வரும் மயிலாப்பூர் கிளப்புக்கு சீல் வைத்தால் அந்த கிளப் உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்