1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (15:00 IST)

மார்ச் 12 முதல் தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

மார்ச் 12 முதல் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்பட்டாலும் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் ஆகிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மார்ச் 12 முதல் 14 வரை மாநிலம் முழுவதும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
மேலும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது