1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 17 பிப்ரவரி 2021 (20:17 IST)

இணையத்தில் பரவிய மணமகளின் ஆபாசப்படம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

வடசென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்னும் ஒரு சில நாட்களில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவருடைய ஆபாச படங்கள் இணையதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
வட சென்னையை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது இந்த திருமணம் இன்னும் ஒரு சில நாட்கள் நடைபெற இருக்கும் நிலையில் திடீரென அவரது ஆபாச படம் இணைய தளங்களில் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் வீட்டார் போலீசாரிடம் புகார் செய்தனர்
 
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தபோது இந்த ஆபாச படங்களை பரப்பியது முகமது ஆசான் என்பது தெரியவந்தது. முகமது ஆசானுக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம் நடக்க நிச்சயம் செய்யப்பட்டது என்பதும் ஆனால் முகம்மது ஆசானின் நடவடிக்கைகள் பிடிக்காததால் மணமகளின் பெற்றோர் இந்த திருமணத்தை நிறுத்திவிட்டு வேறு வாலிபருக்கு திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது
 
இதனால் ஆத்திரமடைந்த முகமது ஆசான், அந்த பெண்ணுடன் வீடியோ காலில் பேசியபோது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளத்தில் பரவி உள்ளது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்