1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2024 (10:32 IST)

டி.என்.பி.எஸ்.சி பணிகளுக்கு கல்வித்தகுதி: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

tnpsc
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளுக்கு குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச தகுதிகள் என்ன என்பதை விளக்கமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
 கடந்த 2020 ஆம் ஆண்டு 135 சமையல் கலைஞர்கள் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதன் கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தோல்வி என அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்ட நிலையில் அவரது பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் நீதிமன்றம் சென்ற நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது அதிகப்படியான கல்வி தகுதியாக கருத முடியாது என்றும்  அது சட்டவிரோதம் என்ற கருதப்படாது என்றும் கூறினார்.
 
 மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வி தகுதியை நியமனம் செய்ய வேண்டும் என்றும் இது குறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran