போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் இருந்த மீன் கடைகள் அகற்றப்பட்ட நிலையில் இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மாநகராட்சிக்கு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் சாலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தை இதை அரசியல் ஆக்க கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் சந்தை கட்டுமானம் முடியும் வரை சாலையின் மேற்கு பக்கம் தற்காலிகாலிக கடைகள் அமைக்கப்படுவதாகவும் அந்த கடைகள் போக்குவரத்துக்கு இடையேயறு ஒன்றை அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி உறுதி உறுதி அளித்துள்ளது.
Edited by Siva