1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (15:45 IST)

தமிழகத்தில் 52 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: சென்னை ஐகோர்ட் அனுமதி..!

rss rally
ஆயுத பூஜை தினத்தை ஒட்டி, தமிழகத்தில் 52 இடங்களில் ஆர். எஸ். எஸ். அணிவகுப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய இடங்களில் அணிவகுப்பு நடத்த ஆர். எஸ். எஸ். அமைப்பு திட்டமிட்டது. இதற்காக காவல்துறையின் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், ஆர். எஸ். எஸ். கேட்ட 58 இடங்களில் 52 இடங்களுக்கு அனுமதி வழங்குமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஆர். எஸ். எஸ். அணிவகுப்புக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

ஆர். எஸ். எஸ். அமைப்பு அனுமதி கேட்ட சில இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டதையும், 58 இடங்களில் 52 இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மீதமுள்ள ஆறு இடங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்று காவல்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து நிபந்தனைகளுடன் ஆர். எஸ். எஸ். கோரிய அனைத்து இடங்களுக்கும் அனுமதி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்து, இந்த வழக்கு முடிவடைந்ததாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.


Edited by Mahendran