வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (13:20 IST)

ஜெயலலிதா செல்வ வரி வழக்கில் தீபக், தீபா..! – நீதிமன்றம் உத்தரவு!

ஜெயலலிதா செல்வ வரி வழக்கில் தீபக் மற்றும் தீபாவையும் இணைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செல்வ வரி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் ஜெயலலிதாவின் வீடு யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினையில் நீதிமன்ற உத்தரவுபடி ஜெயலலிதாவின் வீடு அவரது அண்ணன் மகள் தீபா வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த செல்வ வரி வழக்கில் தீபா, தீபக் பெயரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவர்களையும் இந்த வழக்கில் இணைத்து உத்தரவிட்டுள்ளது.