செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (17:05 IST)

கொரோனா வைரஸ் எதிரொலி: உரிமம் பெறாத குடிநீர் ஆலை குறித்த அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளை மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் குடிநீர் தேவைகள் அதிகரிப்பதன் காரணமாக உரிமம் பெறாத குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக அதாவது ஜூலை 31 வரை இயங்க அனுமதிக்கப்படும் என்று சென்னை உயர்மன்றம் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது
 
மேலும் அரசின் நிபந்தனையின் படி உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதத்தை அரசுக்கு வழங்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள் இதுபற்றி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை வரும் ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.