1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Alagesan
Last Updated : செவ்வாய், 22 நவம்பர் 2016 (10:53 IST)

நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

நடிகர் சங்க உறுப்பினரான ராஜேந்திரன் சென்னை 11வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், இம்மாதம் 2ஆம் தேதி லயோலா கல்லூரியில் உள்ள பெட்ரம் ஹாலில் பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்தார்.

விதிப்படி பொதுக்குழு நடப்பது குறித்து 21 நாட்களுக்கு முன்னதாக உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு இதுதொடர்பாக தகவல் சங்கத்திலிருந்து அனுப்பப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

எனவே வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் நிரந்தரமாக இந்த பொதுக்குழுவை நடத்த தடை விதிக்கவும் மனுவில் ராஜேந்திரன் கோரியுள்ளார்.

வழக்கை விசாரித்த சென்னை 11வது உதவி உரிமையியல் நீதிமன்றம், வழக்கை அனுமதித்து வரும் 25ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நடிகர் சங்கத்திற்கும் பொதுச் செயலாளர் விஷாலுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.