1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 1 மே 2020 (12:07 IST)

கொரோனா பாதிப்பில் ராயபுரத்தை மிஞ்சியது திரு.வி.க.நகர்: 200ஐ தாண்டியதால் பரபரப்பு

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக 100ஐ தாண்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் கொரோனாவால் 94 பேர்களும் நேற்று 138 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் மட்டும் மொத்தம் 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சென்னை ராயபுரத்தில் மட்டுமே அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர். ஆனால் நேற்று ராயபுரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு திருவிக நகர் முதலிடத்தைப் பிடித்துள்ளது
 
நேற்று மட்டும் திருவிக நகரில் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு மொத்தம் 210 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நேற்று ராயபுரத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தம் 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 
 
திருவிக நகர், ராயபுரத்தை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி தேனாம்பேட்டை என்பதும், சென்னையின் முக்கிய பகுதியாக விளங்கும் இங்கு கொரோனாவால் 105 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கோடம்பாக்கத்தில் 97 பேர்கள், தண்டையார்பேட்டையில் 77 பேர்கள், வளசரவாக்கத்தில் 40 பேர்கள் அம்பத்தூரில் 27 பேர்கள் அடையாறில் 20 பேர்கள் திருவொற்றியூரில் 16 பேர்கள் என கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது
 
ஊரடங்கு உத்தரவை மதித்து சமூக விலகலை கடைபிடித்தல் ஆகியவை மட்டுமே கொரோனாவால் இருந்து தப்பிக்க ஒரே வழி என்பதை சென்னை மக்கள் இனிமேலாவது புரிந்து வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்