சென்டரல் - அரக்கோணம் ரயில் கடத்தலா? பாதை மாறியதால் பரபரப்பு.


sivalingam| Last Modified வியாழன், 18 மே 2017 (04:29 IST)
சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்ல வேண்டிய ரயில் ஒன்று நேற்று இரவு திடீரென கும்முடிபூண்டி பக்கம் திருப்பப்பட்டதால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.


 


நேற்று இரவு 7 மணிக்கு அரக்கோணம் செல்வதற்காக சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ரயில் கிளம்பியது. ஆனால் அரக்கோணம் பாதையில் செல்லாமல் அந்த ரயில் திடீரென கும்முடிபூண்டி பாதையில் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலை யாராவது கடத்துகிறார்களா? என்று பயணிகள் இடையே அச்சம் ஏற்பட்டது.

பின்னர்தான் ரயில்வே ஊழியர்கள் செய்த பிழையால்தான் ரயில் பாதை மாறியது என்பது தெரியவந்தது. உடனே ரயில் மீண்டும் சென்டரல் நோக்கி திருப்பப்பட்டது. சிறிது நேர விசாரணைக்கு பின்னர் அந்த ரயில் அரக்கோணம் நோக்கி சென்றது. இதனால் சில மணி நேரம் சென்டரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :