1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 1 ஜூன் 2023 (15:32 IST)

பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை: மருத்துவர் சஸ்பெண்ட்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 50க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இந்த போராட்டம் பெரும் பரப்பளவு ஏற்படுத்திய நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயிற்சி மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். 
 
இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் ஜிதேந்திரனை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
நேற்று பயிற்சி மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,.
 
Edited by Siva