வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 15 மார்ச் 2023 (21:19 IST)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மார்ச் 19 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில்  வடஉள்பகுதிகளில்  நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு  இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடுமென்று தெரிவித்துள்ளது.

மேலும்,   நாளை( மார்ச்16) முதல் வரும் மார்ச்19 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்  ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசமானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.