வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2024 (09:05 IST)

இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

Rain

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டி  மேலும் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியின் பல பகுதிகளில் இன்றும் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி இன்று, கன்னியாக்குமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கோவை மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K