திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 11 ஜூன் 2020 (16:37 IST)

தமிழகத்தில் சமூக பரவல்? தப்பிக்க மத்திய அரசை கோத்துவிடும் ஆளும் அரசு..

சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசுதான் வெளியிட வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி. 
 
நேற்று தமிழகத்தில் 1,927 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பு ஒரே நாளில் சுமார் 2000ஐ நெருங்கியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,927 பேர்களில் 1,390 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,973 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,405 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 3,405,  தேனாம்பேட்டையில் 3,069, கோடம்பாக்கத்தில் 2,805, திரு.வி.க நகரில் 2,456, அண்ணாநகர் 2,362, அடையாறில் 1,481, வளசரவாக்கத்தில் 1,170 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது
 
கொரோனா அதிகரிப்பதை காண்கையில் சமூக பரவல் துவங்கிவிட்டதோ என சந்தேகம் எழுகிறது. ஆனால், தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 
இப்படி இருக்கையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ, கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்துள்ளதை அறிந்துள்ளோம். பிறந்து 3 நாளான குழந்தை முதல் வயதானவர்கள் வரை கொரோனாவில் இருந்து குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
ஆனால், தமிழகத்தில் சமூகப்பரவல் உள்ளதா என மத்திய அரசுதான் தகவல் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.