வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (19:00 IST)

சர்ச்சைக்குரிய குழந்தைகள் நிகழ்ச்சி: ஜீ டிவிக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

சர்ச்சைக்குரிய குழந்தைகள் நிகழ்ச்சி: ஜீ டிவிக்கு மத்திய அரசு நோட்டீஸ்!
சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி நடத்திய ஜீ டிவி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஜீ டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள் பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்தை தெரிவித்ததாக பாஜக வினர் கண்டனம் தெரிவித்தனர் 
 
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் முருகன் அவர்களிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஜீ டிவி க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது 
 
இந்த நோட்டீசில் ஜனவரி 15ஆம் தேதி அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சி குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு ஜிடிவி தரப்பிலிருந்து என்ன விளக்கம் அளிக்கப்பட உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்