திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (13:18 IST)

2022ம் ஆண்டு பத்ம விருதுகள் யார் யாருக்கு? – பரிந்துரைகளை ஏற்கும் அரசு!

2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அளிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று பத்ம விருதுகளுக்கான தகுதியான நபர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. செப்டம்பரில் இந்த விருதுகள் ஜனாதிபதி கையால் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் அடுத்த 2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை விண்ணப்பிப்பதற்கான தளத்தை மத்திய அரசு திறந்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பத்ம விருதுகள் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.