மோடியை நோக்கி பறந்து வந்த செல்போன்..! வைரலாகும் வீடியோ..!!
பிரதமர் மோடியின் வாகனத்தின் மீது செல்போன் வீசப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.
கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு தனி விமானம் மூலம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் பல்லட்டத்திற்கு வந்தார். திறந்தவெளி வாகனத்தில் வந்த பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி மீது பூக்களை வீசி பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரதமர் மோடியின் வாகனத்தின் மீது செல்போன் ஒன்று வீசப்பட்டு உள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.