திங்கள், 15 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 11 மே 2016 (11:40 IST)

சரத்குமார் மீது வழக்குப்பதிவு - பணம் பறிமுதல் தொடர்பாக நடவடிக்கை

சரத்குமார் மீது வழக்குப்பதிவு - பணம் பறிமுதல் தொடர்பாக நடவடிக்கை
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் காரில் இருந்து 9 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த நல்லூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வள்ளிக்கண்ணு தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது அவ்வழியாக வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணமின்றி 9 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது.
 
பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அனைத்தையும் திருச்செந்தூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
 
இந்நிலையில், அப்பகுதி வட்டாட்சியர் அளித்த புகாரின்பேரில், சரத்குமார் மீது ஆறுமுகனேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.