1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (17:29 IST)

நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ்.க்கு எதிராக வழக்கு - துணை முதல்வர் பதவி பறிபோகுமா?

துணை முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வத்தை ஆளுநர் நியமனம் செய்தததை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


 

 
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்த பின், துணை முதல்வர் பதவி ஓ.பி.எஸ்-ற்கு அளிக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் அதற்கான பதவிப்பிரமாணமும் ஓ.பி.எஸ்-ற்கு செய்து வைக்கப்பட்டது.
 
இந்நிலையில், இளங்கோவன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், துணை முதலமைச்சர் பதவி என்பது நியமனப் பதவியே. அந்தப் பதவிக்கு ஒருவரை ஆளுநரிடம் பரிந்துரைக்க மட்டுமே முடியும். ஆனால், அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது.  எனவே, ஓ.பி.எஸ்-ஐ துணை முதல்வராக ஆளுநர் நியமித்ததை ரத்து செய்ய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.