ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (15:40 IST)

பேருந்து மீது கார் மோதி விபத்து, கல்லூரி மாணவர் பலி

accident
செங்கல்பட்டு மாவட்ட திருக்கழுகின்றம் சந்திரசேகர் என்பவரின் மகன் கபிலன்(22). இவர்  தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லுரியில் எம்.ஏ.முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இன்று காலையில்  தனது காரில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்தில் உள்ள கல்லூரியை நோக்கிச்  சென்றுகொண்டிருந்தார்.

அப்போத்,காலை 7 மணி அளவ்ல்,  திருக்கழுகுன்றம் அடுத்த கீரப்பாக்கம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து கல்பாக்கம்  நோக்கி வந்த அரசு பபியருந்து மீது கார் நேருக்கு நேருக்கு மோதியது.

இதில் , கார்   நொறுங்கியது.  இந்தச் சம்பவத்தில் கபிலன் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு,  செங்கல்பட்டு அரசுப்  பொதுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்