1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2016 (04:16 IST)

கார் விபத்து-அது அப்பட்டமான பொய்: மதிமுக விளக்கம்

கார் விபத்து-அது அப்பட்டமான பொய்: மதிமுக விளக்கம்

வைகோ கார் ஏற்படுத்திய விபத்தில் இருவர் பலியானதாக வாட்ஸ் அப்பில் பொய்யான தகவல் வெளியாகியுள்ளதாக மதிமுக கருத்து தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து, மதிமுக சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த 17 ஆம் தேதி பழனி உடுமலை ரோடு சண்முகநதி பாலம் அருகே கோவையில் இருந்து வந்த மினி லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
 
சம்பவ இடத்திலேயே இரு சக்கர வாகனத்தில் சென்ற இரு வாலிபர்களும் உயிர் இழந்ததை  அந்த வழியாக வந்த வைகோ கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தார். உடனே காரை நிறுத்தி விசாரித்து விட்டு வேதனை அடைந்து கண்ணீர் விட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இந்தச் செய்தி பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது. வாட்ஸ் அப்பில் வைகோவின் கார் விபத்து ஏற்படுத்தியதாக அவருடைய நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறான செய்தியை சிலர் பரப்பி வருகின்றனர்.
 
எனவே, பொய்ப் பிரசாரம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.