1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 15 டிசம்பர் 2015 (13:17 IST)

சேலத்தை தமிழ்நாட்டின் தலைநகரமாக அறிவிக்க வேண்டும்: ஈஸ்வரன் கோரிக்கை

இயற்கை சீற்றம் பாதிக்காத சேலத்தை தமிழ்நாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
இது குறித்து ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகர மக்கள் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
முன்பு சுனாமியால் பாதிக்கப்பட்டார்கள். இப்போது மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதனால் தலைநகரை மாற்ற வேண்டியது அவசியம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மையமாக இயற்கை சீற்றம் பாதிக்கப்படாத வகையில் உள்ள சேலத்தை தமிழ்நாட்டின் தலைநகரமாக அறிவிக்க வேண்டும்.
 
ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். விவசாய நிலங்களும் படர்ந்து அதிகமாக உள்ளது. எனவே கோபி செட்டிபாளையத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
 
வரும் சட்டமன்ற தேர்தலில் மதுவிலக்கு கொள்கை ஒரு முக்கிய பிரச்சனையாக அமையும். தமிழக மக்களும் மதுவிலக்கை கொண்டு வருவதில் ஆர்வமாக உள்ளனர். இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.
 
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈரோடு மாவட்டம் கோபியில் பொதுக்கூட்டம் நபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.