1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 19 மே 2020 (17:57 IST)

ஊராட்சி செயலாளர் பொறுப்பு ரத்து : அதிமுக அதிரடி

தமிழக அரசியலில் இருபெரும் திராவிட கட்சிகள் தான் அடிக்கடி ஆட்சி அமைத்து வருகிறது.   மத்தியில் ஆட்சி அமைக்கவும் தமிழகத்தில் இவ்விரு கட்சிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், அதிமுக தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வராகவும் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராகவும் முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமி உள்ளனர்.

இந்நிலையில், அதிமுக தரபில்  ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்ம் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய அதிமுக அமைப்பின் கீழ் செயல்படுகின்ற ஊராட்சி செயலாளர் பொறுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றியவர்களுக்கு விரைவில் மாற்றும் பொறுப்பு வழங்கப்படுவதாகமும் கட்சி தலைமை அறிவித்துள்ளது.