விரிவுரையாளர் போட்டித் தேர்வு - ஜூலை 15 முதல் விண்ணப்பம்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 8 ஜூலை 2016 (19:50 IST)
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் விரிவுரையாளர் போட்டி எழுத்துத் தேர்வுகளுக்கு ஜூலை 15 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
 
 
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் செப்டம்பர் 17 ஆம் தேதியன்று முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர் மற்றும் இளநிலை விரிவுரையாளர் பதவிகளுக்கு போட்டி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.
 
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தோர் தேர்விற்கான விண்ணப்பங்களை சென்னை-35, நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை சனிக்கிழமை உட்பட காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.
 
போட்டி தேர்வு எழுத விருப்பம் உள்ளோர் ஜூலை 30ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
 
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :