வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 2 டிசம்பர் 2015 (15:50 IST)

தென் மாவட்டங்களுக்கு செல்ல மாற்றுப்பாதையில் 400 பேருந்துகள் இயக்கம்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள,  பொதுமக்களுக்கு உதவும் வகையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 400 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


 

 
சென்னையில் பெய்து வரும் கனமழையால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், ஏற்கனவே நிரம்பியுள்ள ஏரிகள், குளங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
 
இதனால், சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் ஜிஎஸ்டி சாலை முழுவதும் வெள்ளம் நிரம்பியுள்ளது. பார்ப்பதற்கு அது ஒரு ஆறு போல் காட்சியளிக்கிறது. இதனால் சென்னை - தாம்பரம் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால், சென்னை நோக்கி வரும் பேருந்துகள் அனைத்தும் செங்கல்பட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையிலிருந்தும் பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
இதனால், பொதுமக்கள், கோயம்பேட்டிலிருந்து வெளியூர் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அதற்கு தீர்வாக, மக்களுக்கு உதவும் வகையில், தமிழக போக்குவரத்து துறை சார்பில், கோயம்பேட்டிலிருந்து தென் மாவட்டங்களுக்கு, மாற்றுப்பாதையில் சுமார் 400 பேருந்துகளை இயக்க முடிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
அந்த பேருந்துகள் ஜிஎஸ்டி சாலை வழியாக செல்லாமல், பூந்தமல்லி, வாலஜா,ஸ்ரீபெரும்புத்தூர் வழியாக செல்லும் என தெரிகிறது.