பிராய்லர் கோழி உடல் நலத்திற்கு நல்லதாம்: அமைச்சர் விளக்கம்


Abimukatheesh| Last Modified வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (17:53 IST)
பிராய்லர் கோழியால் உடல் நலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கால்நடைத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

 

 
கால்நடைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது இன்று பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி, பிராய்லர் கோழி சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுகிறது என்று இணையதளங்கள் மூலம் வெளியாகி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிராய்லர் கோழியால் உடல் நலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை, என்று கூறினார்.
 
பிராய்லர் கோழி சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கால்நடைத்துறை அமைச்சர் பிராய்லர் கோழி நல்லது என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :