வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2016 (11:14 IST)

சத்துணவு ஆயா வேலைக்குக்கூட லஞ்சம்தான் - முத்தரசன் குற்றச்சாட்டு

அரசு வேலை வாய்ப்பில் சத்துணவு ஆயா முதல் லஞ்சம் கொடுத்தால் தான் பெறமுடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கேள்வி எழுப்பினார்.
 

 
குடியாத்தம் தொகுதியில் தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாகா அணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கு.லிங்கமுத்து மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முத்தரசன் வேலூர் வந்தடைந்தார்.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “தமிழகத்தை திமுக, அதிமுக என இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி, மாறி ஆண்டு வருகின்றன. இருதுருவ ஆட்சி முறைக்கு இந்த முறை மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
 
திமுக, அதிமுக இரு கட்சிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசு வேலை வாய்ப்பில் சத்துணவு ஆயா முதல் லஞ்சம் கொடுத்தால் தான் பெறமுடியும். அதேபோல், விரும்பும் இடத்தில் பணிபுரிய வேண்டுமானால் இடமாற்றம் செய்துகொள்வதற்கும் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்ற நிலைதான் உள்ளது.
 
ஆற்று மணல், கிரானைட் கொள்ளை இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் நடந்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் வாய்திறப்பதில்லையே ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.