வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 5 செப்டம்பர் 2022 (12:07 IST)

விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது

pr pandian
விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது
விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக வந்திருக்கும் தகவல் விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் பாமக உள்பட ஒருசில காட்சிகள் இது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் ஏகனாபுரம் இந்த பகுதிக்கு மக்களை சந்திக்க சென்ற போது வழியில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்
 
காஞ்சிபுரம் நீர்வள்ளூர் என்ற பகுதியில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.