1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஜூலை 2023 (12:24 IST)

தனியார் கிளினிக்கில் ஊசி போட்ட 13 வயது சிறுவன் உயிரிழப்பு: போலி மருத்துவர் கைது..!

Injection
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் கிளினிக்கில் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் உயிரிழந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் கைது
செய்யபப்ட்டுள்ளார்.
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே  நாயனசெருவு பகுதியில் செயல்பட்டு வந்த கிளினிக்கில் ஊசி போட்டு சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக தெரிகிறது.
 
இதுகுறித்து போலீசாரின் விசாரணையில் கோபிநாத் என்பவர், மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலி மருத்துவர் கோபிநாத்தை கைது செய்த திம்மாம்பேட்டை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Mahendran