1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 21 ஜூன் 2017 (16:05 IST)

தேங்காய் உரித்துக் கொண்டிருந்த பெண்ணை 9-ஆம் வகுப்பு மாணவன் செய்த காரியம்!

தேங்காய் உரித்துக் கொண்டிருந்த பெண்ணை 9-ஆம் வகுப்பு மாணவன் செய்த காரியம்!

தோட்டத்தில் தனியாக தேங்காய் உரித்துக் கொண்டிருந்த பெண்ணின் காதில் அணிந்திருந்த கம்மலை 14 வயதான 9-ஆம் வகுப்பு மாணவன் பறிக்க முயன்று அந்த பெண்ணை தாக்கியதை அடுத்து அந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.


 
 
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள மின்னப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமியின் மனைவி அம்பிகாவதி. 48 வயதான அம்பிகாவதி தங்களுக்கு சொந்தமாக சுக்கிரமணியம் பாளையத்தில் உள்ள தோட்டத்தில் நேற்று நண்பகல் தேங்காய் உரித்துக் கொண்டிருந்தார்.
 
அம்பிகாவதி தேங்காய் உரித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த சிறுவன் ஒருவன் திடீரென அம்பிகாவதி காதில் அணிந்திருந்த கம்மலை பறிக்க முயன்றான். இதனை தடுக்க முயன்ற அம்பிகாவதியை மண்வெட்டியில் தாக்கவும் முயன்றான் அந்த சிறுவன்.
 
இதனால் அம்பிகாவதி சத்தம் போட அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து அந்த சிறுவனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தானர். சிறுவனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மின்னப்பாளையம் திட்டுப்பாறையை சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் என்பது தெரியவந்தது.
 
14 வயதான அந்த சிறுவன் அங்குள்ள அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இதனையடுத்து மாணவனை கைது செய்த போலீசார் பொள்ளாச்சியில் உள்ள சிறார் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர்.