திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 23 மார்ச் 2024 (14:04 IST)

பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! போலீசார் குவிந்ததால் பரபரப்பு..!!

Palani Station
பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் பேருந்து மற்றும் வாகனங்கள் மற்றும் ரயிலில் பழனி முருகனை தரிசனம் செய்ய வருகை தருவார்கள். 
 
இந்த நிலையில் இன்று பழனி ரயில் நிலையத்தில் திடீரென்று 50க்கும் மேற்பட்ட ரயில்வே போலீஸ் மற்றும் பழனி நகர போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் இணைந்து வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகள், குப்பை தொட்டி, கடைகள், ரயில்வே தண்டவாளம் என அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.


இந்தச் சோதனையானது பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு மின்னணு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அதன் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழனி பேருந்து நிலையம் மற்றும் அடிவாரம் பகுதிகளில் சோதனை செய்யப்பட்டது.