ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 30 டிசம்பர் 2024 (10:06 IST)

சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பக்தர்கள் அதிர்ச்சி..!

vadapalani temple
சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் நிலை உள்ளது. கடந்த சில நாட்களாக பொது இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் நள்ளிரவு 12:15 மணிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அதிகாலை கோயில் நடை திறந்த பின்னர் சோதனை செய்ததில் வழக்கம் போல் குரலை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காவல்துறை கட்டுப்பாட்டு அறிக்கை வெடிகுண்டு மிரட்டல் செய்த மருமகள் போலீசார் தேடி வருவதாகவும், கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களாக, வணிக வளாகங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்படும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.


Edited by Siva