ரஜினியை மிரட்டும் பாஜக: பகீர் குற்றச்சாட்டை வைக்கிறார் இவர்!

ரஜினியை மிரட்டும் பாஜக: பகீர் குற்றச்சாட்டை வைக்கிறார் இவர்!


Caston| Last Updated: செவ்வாய், 16 மே 2017 (17:20 IST)
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இது காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
ஆனால் இந்த சிபிஐ சோதனையை காங்கிரஸ் நிர்வாகி கராத்தே தியாகராஜன் இது ரஜினியை மிரட்டுவதற்கன சோதனை என கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். 9 வருடங்களுக்கு பின்னர் நேற்று தான் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது பேசிய ரஜினி தான் அரசியலுக்கு வருவது குறித்து சில கருத்துக்களை சூசகமாக கூறிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் ப.சிதம்பரம் வீட்டில் நடைபெற்ற இந்த சிபிஐ சோதனையை பற்றி பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், ரஜினியை மிரட்டவே ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
 
ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் தனிக்கட்சித் தொடங்கக் கூடாது. அவர் பாஜகவில்தான் இணைய வேண்டும் என்பதற்காக அவரை மிரட்டவே இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :