தொடர்புடைய செய்திகள்
- செந்தில் பாலாஜி ராஜினாமாவுக்கு பின் பாஜகவா? திமுக தலைமை அதிர்ச்சி..!
- 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்-ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் அறிவிப்பு
- மின்னணு வாக்குப்பதிவில் எனக்கு நம்பிக்கை உண்டு., கார்த்திக் சிதம்பரம்
- பாஜகவில் இணைகிறாரா விஜயதாரிணி? குமரி தொகுதியில் போட்டி என தகவல்..!
- வெற்றி துரைசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் திரும்பிச் சென்ற விஜய்?
பொறுத்தது போதும், இனி அதிமுகவை உடைப்பதுதான் வழி.. பாஜக மேலிடம் அதிரடி..!
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அனைத்து வழிகளும் மூடப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக அதிமுகவை உடைப்பது தான் வழி என பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
அதிமுகவிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த பாஜக மேலிடம் பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்ததாகவும் ஆனால் முதல் கட்ட பேச்சு வார்த்தையில் இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கறாராக சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது
இதையடுத்து அதிமுகவை வழிக்கு கொண்டு வர முன்னாள் நீதித்துறை பிரமுகர் ஒருவர் மூலம் பாஜக முயற்சி செய்ததாகவும் அந்த வழியும் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. எனவே இனி அதிமுக கூட்டணிக்கு வராது என்பதை உறுதி செய்து கொண்ட பாஜக அடுத்த கட்டமாக அதிமுகவில் உள்ள பாஜக ஆதரவாளர்களை இழுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிமுகவை உடைப்பதை தவறை இனி வேறு வழியில்லை என்று பாஜக மேலிடம் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே 13 முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்த நிலையில் இனி சில அதிமுக பிரபலங்களும் பாஜகவின் சேர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
