வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 31 மே 2021 (12:25 IST)

பாஜகவுக்கு சபாநாயகர் பதவியா? மறுக்கும் என்.ஆர்.காங்கிரஸ் !

பாஜகவுக்கு சபாநாயகர் பதவியா? மறுக்கும் என்.ஆர்.காங்கிரஸ் !
சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு தரக் கூடாது என்று முதல்வர் ரங்கசாமிக்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளதாக தகவல். 

 
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் சட்ட உறுப்பினர்களாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
 
இந்நிலையில், சபாநாயகர், 3 அமைச்சர்கள் பதவி கேட்டு பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு தரக் கூடாது என்று முதல்வர் ரங்கசாமிக்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர்களை முதல்வர் ரங்கசாமி சந்திக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.