1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2016 (11:34 IST)

சசிகலா புஷ்பாவின் சர்ச்சை புகைப்படங்களை வெளியிட்டவர் இவர் தான்?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


 
 
தற்போது இந்த புகைப்படங்களை வெளியிட்டவர் போயஸ் கார்டனில் பணி புரியும் பிலால் என்பவர் தான் என்பது தெரியவந்துள்ளது. இவரும் சசிகலா புஷ்பாவும் திருமணம் செய்துகொண்டனர் என்ற தகவல்களும் வருகின்றன.
 
அதிமுகவில் பதவிகள் பெறுவதற்கு முன்னர் அந்த இடத்தை அடைவதற்காக சசிகலா புஷ்பா அங்கு நடக்கும் செய்திகளை தெரிந்துகொள்ள கார்டனில் வேலை செய்து வரும் பிலால் என்பவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அவரும் மனைவி என்ற முறையில் சசிகலா புஷ்பாவிடம் கார்டனில் நடக்கும் விஷயங்களை கூறியிருக்கிறார்.
 
பின்னர் போலீஸ் உளவுத்துறை அதிகாரி பாண்டியன்  மற்றும் திருச்சி சிவா ஆகியோருடன் சசிகலா புஷ்பாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சிவாவுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருந்தது பிலாலுக்கு பிடிக்கவில்லை. இதனால் சசிகலா புஷ்பாவின் வீட்டில் இருக்கும் அவரது தோழி காவ்யா மூலம் சசிகலா புஷ்பாவும், சிவாவும் தனிமையில் இருக்கும் படங்களை எடுத்து அதனை வாட்ஸ் அப்பில் விட்டதாகவும் அவரே கூறியதாக தகவல்கள் வருகின்றன.