வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 12 நவம்பர் 2015 (08:37 IST)

அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை: நிதின் கட்கரி வலியுறுத்தல்

பீகார் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது குறித்து கட்சி தலைமையை விமர்சித்த, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.


 

 
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியையும், கட்சி தலைவர் அமித் ஷாவையும் மறைமுகமாக சாடும்படியாக, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்கா, சாந்த குமார் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
 
இந்நிலையில், இது குறித்து கட்சியின் முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, செய்தியாளர்களிடம் கூறுகையில், "பீகார் தேர்தலில் கட்சி மோசமான நிலையை அடைந்திருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியையும், தலைவர் அமித் ஷாவையும் மட்டுமே பொறுப்பாக்க முடியாது.
 
கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தலைவர்களுக்கும் இதில் கூட்டு பொறுப்பு உள்ளது. பொறுப்பற்ற விதத்தில் கருத்து வெளியிட்டு, கட்சியின் புகழுக்கு களங்கம் விளைவித்து வருகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கட்சி தலைவர் அமித் ஷாவிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.