1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 2 ஜூலை 2017 (12:30 IST)

பிக் பாஸ் இல்லுமினாட்டிகளின் சதி: அடித்து கூறும் ஆன்ட்டி இல்லுமினாட்டி இளைஞன்!

பிக் பாஸ் இல்லுமினாட்டிகளின் சதி: அடித்து கூறும் ஆன்ட்டி இல்லுமினாட்டி இளைஞன்!

தற்போது தமிழகத்தில் எங்கும் பேசப்படும் ஒரு ஹாட் டாப்பிக்காக மாறிவிட்டது பிக் பாஸ் நிகழ்ச்சி. நாட்டில் பல பிரச்சனைகள் இருந்தாலும், கல்லூரிகள், பள்ளி, அலுவலகம் பொது இடம் என அனைத்து இடங்களிலும் பிக் பாஸ் பற்றி பேச்சுதான்.


 
 
இந்நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியே இல்லுமினாட்டிகளின் சதி வேலைன்னு ஆன்ட்டி இல்லுமினாட்டி பாரி சாலன் அடித்து கூறுகிறார். பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இது முழுக்க முழுக்க இல்லுமினாட்டிகளின் சதி தான் என உறுதியாக கூறுகிறார்.
 
சரி அது என்ன இல்லுமினாட்டின்னு நம்மல்ல பலருக்கும் சந்தேகம் இருக்கும். உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சர்வதேச நாட்டாமைகள்தான் இல்லுமினாட்டிகள். உலக அரசியல் அமைப்புகள், மதங்கள், வங்கிகள், ஹாலிவுட், மீடியாக்கள், நுகர்பொருட்கள் எல்லாம் எல்லாம் இவர்களது கையில். இன்றைய உலகைப் பொறுத்தவரை இயற்றலும் ஈட்டலும் காத்தலும் அழித்தலும் இவர்கள் கையில். இது உண்மையோ, பொய்யோ இல்லுமினாட்டிகள் பற்றி இப்படித்தான் கூறுகிறார்கள்.
 
இந்த இல்லுமினாட்டிகள் பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பார்க்கலாம். முதல்ல பிக் பாஸ் எப்படி இல்லுமினாட்டிகளின் சதி என பாரி சாலன் கூறுவதை பார்ப்போம். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லுமினாட்டிகளின் சதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார் பாரி சாலன்.
 
வெளிநாடுகளில் பிக் பிரதர் என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிதான் இங்கு பிக் பாஸ் என்ற பெயரில் நடத்தப்படுகிறது. நம்முடைய சமுதாய அமைப்பை சீரழித்து பல சமூக பிரச்னைகளை ஏற்படுத்தணும் என்பதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நோக்கம் என்கிறார்.
 
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விடும். இது போன்ற உளவியல் பிரச்சனைகளால் குடும்பமே சிதைந்துவிடும். இப்படி நம் ஊரின் குடும்ப அமைப்புகளை சிதைப்பதுதான் இல்லுமினாட்டிகளின் திட்டம்.
 
நம்ம குடும்ப அமைப்புகளை சிதைப்பதால் இல்லுமினாட்டிகளுக்கு என்ன லாபம் என்று கேட்டால் பாரி சாலன் சொல்கிறார், இந்த உலகத்தின் மொத்த வணிகத்துறையையும் அவங்கதான் ஆதிக்கம் செஞ்சுட்டு வர்றாங்க.
 
நம்ம குடும்ப அமைப்பு உடைச்சு எல்லோரும் தனித்தனி ஆளாக்கிவிட்டா, டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாம் தனித்தனியா வாங்கணும். வியாபாரம் அதிகமாகும். இதுதான் இந்த நிகழ்ச்சியின் மூலம் இல்லுமினாட்டிகள் செய்ய நினைக்குற சதின்னு சொல்லி திகில் கிளப்புகிறார்.
 
அது மட்டுமில்ல பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் கூட இல்லுமினாட்டி தான் என்கிறார் பாரி சாலன். மேலும் பிக் பாஸின் லோகோவான ஒற்றைக்கண் இல்லுமினாட்டிகளின் சின்னம் என அதற்கான ஆதரத்தை கூறுகிறார் அவர். இல்லுமினாட்டிகளின் சின்னத்திலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் சின்னத்திலும் ஒற்றைக்கண் இருப்பது குறிப்பிடத்தக்கது.