1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 6 மார்ச் 2017 (15:09 IST)

முன்பு அம்மா ஆட்சி, இப்போ ஆன்மா ஆட்சியா? ராமதாஸ் ட்வீட்

ஓ.பி.எஸ்.யை ஜெ. ஆன்மா மன்னிக்காது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். 122 எம்.எல்.ஏக்களை ஜெ. ஆன்மா மன்னிக்காது என ஓபிஎஸ் கூறுகிறார். இவர்களை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் இருவர் கூறியதையும் குறிப்பிட்டு முன்பு அம்மா ஆட்சி, இப்போது ஆன்மா ஆட்சியா? என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 

 
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகள் தமிழக அரசியலில் மோதிக்கொண்டு உள்ளனர். ஓ.பி.எஸ். அணி அதிமுக கட்சியை தங்கள் வசம் கைப்பற்ற வேண்டும் என போராடி வருகிறது. சசிகலா அணி அதிமுக கட்சியை தக்கவைத்துக்கொள்ள போராடி வருகிறது. சசிகலாவை வீழ்த்த ஓ.பி.எஸ் அணி ஜெயலலிதா மரணம் குறித்த உள்ள மர்மத்தை ஆயுதமாக கையில் எடுத்துள்ளது.
 
ஜெயலலிதா மறைவுக்கு காரணம் சசிகலாதான் என கூறி வருகின்றனர். ஜெயலலிதா சிகிச்சை குறித்து உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வருவோம் என போராடி வருகின்றனர். இதனிடையே ஓ.பி.எஸ். மற்றும் அவரது அணியினர் அதிமுகவிற்கு துரோகம் செய்து விட்டார்கள் என கூறிவருகின்றனர்.
 
சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர், ஜெ. ஆன்மா பன்னீர்செல்வத்தை மன்னிக்காது என கூறியுள்ளார். ஓ.பி.எஸ்., 122 எம்.எல்.ஏ.க்களையும் ஜெ. ஆன்மா மன்னிக்காது என கூறியுள்ளார்.
 
இதைத்தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் இவர்களை கேலி செய்து கிண்டலாக ஒரு ட்வீட் செய்திருக்கிறார். அதில்,
 
ஓ.பி.எஸ்.யை ஜெ. ஆன்மா மன்னிக்காது - விஜயபாஸ்கர்; 122 எம்.எல்.ஏக்களை ஜெ. ஆன்மா மன்னிக்காது - ஓ.பி.எஸ். முன்பு அம்மா ஆட்சி, இப்போது ஆன்மா ஆட்சியா? என கருத்து தெரிவித்துள்ளார்.
 
மேலும் இரு அணியினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் தெரிவிப்பது, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி விட்டது என தெரிவித்துள்ளார்.