ஜன.17, 18 பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை!
கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும், கிரிவலத்தில் மக்கள் பங்கேற்க தடை தொடர்ந்து வருகிறது.
பஞ்சபூத தலங்களில் அக்கினி தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கிரிவலம் நடத்தப்படுவதும், அதில் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும் கலந்து கொள்வதும் வழக்கம்.
ஆனால் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாக திருவண்ணாமலையில் கிரிவலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பல்வேறு கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும், கிரிவலத்தில் மக்கள் பங்கேற்க தடை தொடர்ந்து வருகிறது.
ஆம், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஜன.17, 18 ஆகிய தினங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தோற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.