செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2020 (16:39 IST)

தமிழகத்தில் காலை 6 முதல் 1 மணிவரை பேக்கரிகள் இயங்கலாம்…உணவகத்தில் பார்சலுக்கு அனுமதி !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, சென்னையில்,  கடந்த 12 ஆம் தேதிமுதல்  காலை  6 மணி முதல் மதியம் 1 :00 மணிவரை பேக்கரிகளை திறக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில், காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை பேக்கரிகள் இயங்கத் தடையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு அறிவித்துள்ளதாவது :

தமிழகத்தில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் இயங்க தடையில்லை; உணவகங்களில் பார்சல் விற்பனைக்கு மட்டுமே அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது எனவும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் எனவும், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாத பொருட்கள் இலவசம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.