வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 19 ஜூலை 2017 (17:00 IST)

சசிகலாவிற்கு வசதிகள் செய்து கொடுத்தது இவர்தான்....

சிறையில் உள்ள சசிகலாவிற்கு சிறப்பு சலுகை செய்து கொடுத்தவர் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக சில சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த  14ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார்.  
 
இதையடுத்து, இதுபற்றி விசாரிக்க முன்னாள் ஐ.ஏ.எஸ் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்கள் அங்கு சென்று விசாரணையை தொடங்கவில்லை. அந்நிலையில், சிறையில் நடந்த விதிமிறல்கள் குறித்த ஆதரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ரூபா மீண்டும் புகார் கூறினார்.  மேலும், அவரையும், டிஜிபி சத்யநாராயணாவையும் வேறு பணிக்கு மாற்றம் செய்துள்ளது கர்நாடக அரசு.
 
மேலும், சசிகலாவிற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து 5 அறைகளின் புகைப்படங்கள் வெளியானது. மேலும், சிறை வராண்டாவில் சசிகலா சுடிதாரோடு, கையில் கைப்பையுடன் நடமாடும் காட்சிகளும் வீடியோவாக வெளியாகியது. இதன் மூலம் சிறையில் அவருக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பது அம்பலமானது.  பூர்விகமாக கர்நாடக மாநிலத்தைக் கொண்ட வெளிநாடு வாழ் நபர் ஒருவர் இதற்கு பின்னணியில் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
 
கர்நாடக மாநிலம், துமகூருவை சேர்ந்த அவர், ஆஸ்திரேலிய நாட்டில் தொழில் செய்து வருகிறார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பையும் அவர் நடத்தி வருகிறார். மேலும், டிடிவி தினகரனுக்கு மிகவும் நெருக்கமான அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளுடன் பேசி சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சொகுசு வசதிகளை செய்து கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
 
அவர் மூலமாகத்தான் சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கை மாறியுள்ளதும், சிலருக்கு மாத சம்பளம் போல் ரூ.3 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.