செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (09:37 IST)

இனி அத்தை மகன், மாமன் மகளை திருமணம் செய்ய முடியாது!? – பொது சிவில் சட்டத்தால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தில் உள்ள திருமணம் குறித்த கட்டுப்பாடுகள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.



சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பொது சிவில் சட்டம் எதிர்கட்சிகளின் பெரும் எதிர்ப்பை கண்டு வருகிறது. மெஜாரிட்டி, மைனாரிட்டி பாரபட்சம் இல்லாமல் அனைவருக்குமான சமமான சட்டத்தை வழங்குவதற்காகவே பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய பாஜக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் அதில் திருமணம் குறித்து இடம்பெற்றுள்ள சட்டம் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.


இந்தியாவை பொறுத்தவரை உறவு முறையில் திருமணம் செய்வதில் இனக்குழு சார்ந்து, மாநிலம், மொழி சார்ந்து வெவ்வேறு விதமான நடைமுறைகள் உள்ளது. சில குழுக்களில் பெரியப்பா, சித்தப்பா வழி மகன், மகளை திருமணம் செய்வது வழக்கமாக உள்ளது. தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் அத்தை, மாமன் உறவின் முறையில் உள்ள மகன், மகளை திருமணம் செய்வது வழக்கமானதாக உள்ளது.

இந்நிலையில் உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தின் படி மாமன்\ அத்தை முறை உறவில் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் உறவில் வாழ்வதற்கு 21 வயதிற்கும் மேல் ஆகியிருக்க வேண்டும் என்றும், லிவ் இன் வாழ்க்கையையும் முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்றும், மீறினால் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K