செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2017 (13:03 IST)

காதலியின் அந்தரங்க வீடியோவை மாப்பிள்ளைக்கு அனுப்பிய தடகள வீரர் கைது

காதலியின் அந்தரங்க வீடியோவை மாப்பிள்ளைக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்திய தடகள வீரர் கைது செய்யப்பட்டார்.


 

 
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தனது தந்தை நடத்தி வரும் தடகள பயிற்சி மையத்தில் அவருடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுப்பட்ட தடகள வீரர் தீபக் என்பவரோடு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிக் பழகியுள்ளனர். தீபக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். 
 
அதை வீடியோ எடுத்துள்ளார். இதை அறிந்த அந்த மாணவி தீபக்குடன் இருந்த காதலை முறித்துக்கொண்டார். மாணவிக்கு வீட்டில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதை அறிந்த தீபக் மாப்பிள்ளைக்கு அவர் உல்லாசமாக இருந்த வீடியோவை அனுப்பியுள்ளார். இதையடுத்து திருமணம் நின்றுபோனது.
 
இந்நிலையில் மாணவி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தீபக் மீது புகார் அளித்தார். மாணவி அளித்த புகாரின் பேரில் தீபக் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.